திருப்புத்துார் அணைக்கட்டு பராமரிப்பு: ரூ.4 கோடியில் திட்டம் அனுமதி
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே ஐந்துகால் அணைக்கட்டு மற்றும் 2 கண்மாய்கள் பராமரிக்க ரூ 4 கோடி மதிப்பிலான திட்டம் அனுமதியாகியுள்ளது.
திருப்புத்துார் ஒன்றியத்தில் மணிமுத்தாறு செல்லும் வடமாவளி அணைக்கட்டு கடந்த ஆண்டு பராமரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஐந்துகால் அணைக்கட்டு பராமரிப்புக்கான திட்டத்திற்கு அனுமதியாகியுள்ளது.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,
'இந்த அணைக்கட்டு 1960ல் கட்டப்பட்டது. தற்போது இந்த அணைக்கட்டு மற்றும் இரு கண்மாய்கள் ரூ 4 கோடியில் பராமரிக்கப்பட உள்ளது. அதற்கான திட்டத்திற்கு பட்ஜெட்டில் அனுமதியாகியுள்ளது. அரசாணை வந்த பின்னர் டெண்டர் விடப்பட்டு மழை காலத்திற்கு பின்னர் பணி துவங்கப்படும். அணையின் ஷட்டர்கள் புனரமைப்பு, நீர் வடியும் தளம் சீரமைப்பு, நீரோடும் வாய்க்கால் சீரமைப்பு, வயல்களுக்கு நீர் செல்லும் 3000 மீ நீளமான கான்கிரீட் கால்வாய் பராமரிப்பு நடைபெறும்.
மேலும் இரு கண்மாய்களில் கலுங்கு,மடைகள் புதிதாக கட்டப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. தற்போது மழை துவங்கும் முன்பாக பொ.ப.து. அணைகள் கண்காணிக்கப்பட்டு ஷட்டர்களில் பராமரிப்பு, முட்செடிகள் அகற்றம், பலவீனமான கரைகளில் மண் அணைப்பு செய்யப்பட்டுள்ளது. இது வரை ஆறுகளில் நீர்வரத்தில்லை. ' என்றனர்.
மேலும்
-
மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைக்க மானியம்
-
புரட்டாசி மஹாளய அமாவாசையில் ரூ.22 லட்சத்திற்கு காய்கறி விற்பனை
-
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் புரட்டாசி அமாவாசை வழிபாடு
-
த.வெ.க., நிர்வாகி பெயரை கூறி லாட்டரி விற்ற 2 பேருக்கு 'காப்பு'
-
நுால் மில்லில் பெண் கொலை சட்டீஸ்கர் வாலிபருக்கு 'ஆயுள்'
-
யு.பி.ஐ., கட்டண விதிப்பிற்கு எதிர்ப்பு வணிகர் சங்கம் போராட்டம் அறிவிப்பு