எச்.எம்.எஸ்., சங்க கூட்டம்

மதுரை:மதுரையில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க மாவட்டக்கிளை கூட்டம் நடந்தது. தலைவர் அங்குசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஷாஜகான் வரவேற்றார்.

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் 30 சதவீதம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கருணைத்தொகையாக போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டப்படி பண்டிகை கால முன்பணத்தை 30 நாட்களுக்கு முன்னதாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குடும்ப மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணியில் உள்ள டிரைவர், கண்டக்டர்களுக்கு கூடுதல் பேட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் ஒச்சாத்தேவன், கண்ணன், சேதுராமன், சுந்தரராஜன், சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement