உயிர் காக்கும் உன்னத பெட்டகத்திற்கு தட்டுப்பாடு
சின்னமனூர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சையாக மூன்று மாத்திரைகள் அடங்கிய உயிர் காக்கும் உன்னத பெட்டகம் தற்போது வழங்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது..
கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களை அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளுக்கு அழைத்து செல்ல சில மணி நேரங்கள் ஆகலாம். அதற்குள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. அதை தடுத்து உயிரை பாதுகாக்க கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களது கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்தை டாக்டர்கள் 'கோல்டன் ஹவர்' என்கின்றனர். அந்த ஒரு மணி நேரத்திற்குள் ஆஸ்பிரின், குலாப்பிட்ரெல், அட்ரோவாஸ்டாடின் ஆகிய 3 மாத்திரைகளை கொடுத்தால், அதிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும். அந்த மாத்திரைகள் கொடுத்த பின் உடனடியாக அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி தொடர் சிசிச்சை செய்து உயிரை காப்பாற்றிடலாம்.
இதனை 'லோடிங் டோஸ்' என அழைக்கப்படும். இந்த மூன்று மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை உயிர் காக்கும் உன்னத பெட்டகம் என்று பெயரிடப்பட்டு, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் 20 பெட்டகங்கள் வழங்கப்பட்டது. ஆனால் சமீப காலங்களில் இந்த பெட்டகம் போதியளவு இல்லை. இப்பெட்டகம் தற்போது அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தட்டுப்பாடு உள்ளது. மாவட்ட துணை இயக்குநர் போதிய எண்ணிக்கையில் இந்த பெட்டகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்