மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
புதுடில்லி: டில்லியில் இன்று( அக்டோபர் 09) இரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை இன்டர்நெட் சேவையை துண்டிக்கப்பட உள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக நாளை டில்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், டில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரில் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட உள்ளன.
டில்லியில் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்டர்நெட் சேவை தற்காலிகமாக துண்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. ஜன்பத்- கர்தவயா பாதை சந்திப்பில் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை துண்டிக்கப்படுகிறது.
கலவரம்
டில்லியில் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கரப்பான்பூச்சி இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் காயம் அடைந்தனர்.
தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்டர்நெட் சேவையை மத்திய அரசு துண்டித்துள்ளது.
மேலும்
-
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!