மக்கள் தொகை கணக்கெடுப்பில்கிராம தொகுப்பு தயாரிக்கும் பணி: அக்.,15ல் துவங்குகிறது
தேனி: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக கிராம, நகர தொகுப்பு தயாரிக்கும் பணி அக்.,15ல் துவங்குகிறது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ன் முதற்கட்ட பணிகள் ஆக.,1 முதல் ஆக.,30 வரை நடந்தது. இதில் வீடுகள் பற்றிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பின் மற்றொரு பகுதியாக நகர, கிராம தொகுப்பு தயாரிக்கும் பணி அக்.,15ல் துவங்குகிறது. கிராம தொகுப்பு தயாரிப்பு இப்பணியை வி.ஏ.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். நகர தொகுப்பு தயாரிக்கும் பணியை நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் செய்ய உள்ளனர்.
இந்த தொகுப்பில் குறிப்பிட்ட ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், நீர்பாசனம், குடிநீர் வசதி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, சுகாதார வசதிகள், சாகுபடி செய்யப்படும் வேளாண் பயிர்கள், நீர் பாசன முறைகள் உள்ளிட்டவை இடம் பெறும். அதிகாரிகள் கூறுகையில், 'இந்த தொகுப்பு தயாரிக்க அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பிற்கான இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளோம்,' என்றனர்.
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்