பாதியில் நிற்கும் பால பணியால் வாகன ஒட்டிகள் பரிதவிப்பு
தேனி: தேனியில் நடைபெறும் மேம்பால பணியை முடிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தினசரி வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தேனி-- மதுரை ரோட்டில் அரண்மனைப்புதுார் விலக்கு அருகே 3 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கியது. ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிட்டாலும் இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை. பாலத்தின் மூன்று பகுதிகளில் இருந்து வாகனங்கள் மேலே ஏறும் வகையிலும், சுரங்கப்பாதை வசதியுடனும் அமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் மதுரை ரோடு, அரண்மனைப்புதுார் விலக்கு ஆகிய இரு பகுதிகளில் மட்டும் பால பணிகள் ஓரளவிற்கு முடிந்துள்ளது. மேம்பாலத்தில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் பகுதியில் பொருத்தும் கர்டர்கள் செய்யும் பணி ஓராண்டிற்கு மேலாக நடந்து வருவதால் பணி பணிகளை முடிக்கவில்லை என நெடுஞ்சாலைத்துறையினர் காரணம் கூறுகின்றனர். இதனால் தினமும் ரயில் செல்லும் நேரத்தில் இவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். விஷேச நாட்களில் பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நிற்பது தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் மேம்பால பணிகளை விரைவு படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம்; நிதின் நபின் குற்றச்சாட்டு
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்