நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம்; நிதின் நபின் குற்றச்சாட்டு
"இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 140 கோடி மக்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து பங்களித்து வரும் நிலையில், நாட்டைச் சீர்குலைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதைச் செய்வது யார்," என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறியதாவது:
அராஜகத்தை உருவாக்கும் இரண்டு குழுக்கள் இதில் ஈடுபட்டுள்ளன: ஒன்று 'இண்டி' (INDI) கூட்டணியைச் சேர்ந்த ராகுல் தலைமையிலான குழு; மற்றொன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் சகாக்களான சிஜேபி தலைமையிலான குழு. இந்தக் குழுக்கள் இருவருக்கும் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
உங்கள் உள்நோக்கங்களை இந்திய மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டில் யார் அதிக அளவில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க முடியும் என்று போட்டியிடும் உங்கள் அராஜகப் போட்டி வெற்றிபெறாது.
இவர்களை மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர்... அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கோ பதிலாக, நாட்டைச் சீர்குலைக்க நீங்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளீர்கள்.
உங்கள் அரசியல் நோக்கங்களுக்காகவும், வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரிலும் நீங்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று நான் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு நிதின் நபின் கூறினார்.
வாக்குத் திருடர்கள் நாட்டை, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சதித் திட்டத்தை இந்திய மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
வேகாத விருமாண்டி.. கோவம் வர்ற மாதிரி சேக் சொல்லாத
அது தெரியுது
நடவடிக்க என்ன
இந்த காலகட்டத்தில்
இந்திரா PM ஆ
இருக்கனும்
இப்பவும் ....
பப்புவுக்கு இந்தியாவை சீர்குலைக்க எண்ணும் அந்நிய சக்திகளின் ஆதரவு இருக்கு. எந்த துரோகம் செய்தாவது தான் பிரதமராகனும், அவ்வளவுதான். இதற்கெல்லாம் ஆதரவாக போராட ஒரு படித்த தற்குறி கூட்டம் இந்தியா முழுதும் இருக்கு.