அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி

கோவை: ''சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் தமிழகத்தை ஆண்ட அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்'' என பாமக தலைவர் அன்புமணி கூறினார்.

கோவையில் நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது: நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு இடைத்தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற்று இருக்கிறது. கடந்த கால இடைத்தேர்தல்கள் எல்லாம், ஆடுகள், மாடுகள் போல் மக்களை சந்தையில் அடைத்து வைத்து பணம், மது, உணவு கொடுத்து ஓட்டளிக்க வைத்து வெற்றி பெற்ற கட்சிகள் எல்லாவற்றையும் பார்த்தோம்.

தற்போது ஜனநாயக முறையில் நடந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்று இருக்கிறது. 2 தொகுதிகளிலும் 5 மாதத்திற்கு முன் வெற்றி பெற்ற அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு வெற்றிகளும் ஆளுங்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் தமிழகத்தை ஆண்ட அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும். நான் அவர்களை தவறாக சொல்லவில்லை. நல்ல எண்ணத்துடன் தான் சொல்கிறேன். தவறான எண்ணத்தில் சொல்லவில்லை. இவ்வாறு அன்புமணி கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

கோவையில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர் பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement