கள்ளக்குறிச்சியில் குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி, மாதிரி தேர்வுகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி .,குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு மற்றும் தொடர் மாதிரி தேர்வுகள் துவங்க உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கான மொத்த காலி பணியிடங்கள் 6,574 ஆகும். இதற்கான தேர்வு வரும் 2027 ஜனவரி 10ம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இதற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி துவங்கி சனி, ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
மேலும் இத்தேர்வின் பொது தமிழுக்கு 7 மாததி தேர்வுகள் வரும் 24, நவ.7, 21, டிச.5, 12, 19, 26 ஆகிய தேர்திகளில் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் கார்டு நகலுடன், கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட் அருகில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம். https://forms.gle/KvzkmGDeh5mA8rLH9 என்ற கூகுல் பார்ம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 04151-295422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
மேற்கு வங்க இடைத்தேர்தல்; இரு தொகுதிகளிலும் பாஜ முன்னிலை
-
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்
-
தாராபுரம், மதுராந்தகம் 2 தொகுதியிலும் தவெக முன்னிலை; புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ் வெற்றி
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்