மானியத்தில் கிடைக்குது கோ- 32 சோள விதைகள்
சூலுார்: உயர் விளைச்சலும், இரட்டை பயனை தரும், கோ 32 சோள ரக விதைகளை, மானிய விலையில் வேளாண்துறை வழங்கி வருகிறது.
'கோ 32' சோளம், தமிழ்நாடு வேளாண் பல்கலையால் உருவாக்கப்பட்டு, உயர் விளைச்சலும், தானியம் மற்றும் கால்நடை தீவனமாக தட்டுகளை தரும் புதிய ரகம். 95 முதல் 105 நாட்களுக்குக்குள் அறுவடைக்கு வரக்கூடிய குறுகிய கால பயிராகும். மானாவாரி மற்றும் நீர்ப்பாசன பகுதிகளில் வறட்சி தாங்கி வளரக்கூடியது. நீர் பாசனத்தில், எக்டேருக்கு, 2,900 கிலோ வரையிலும், மானாவாரி நிலங்களில், எக்டேருக்கு, 2,400 கிலோ வரை மகசூல் தரும் ரகமாகும்.
தானியமும், கால்நடை தீவனமும் அதிகளவில் கிடைக்கிறது. இந்த ரக சோள தட்டுகள் கால்நடைகளுக்கு சிறந்த பசுந்தீவனமாக உள்ளது. புரதம், கால்சியம் உட்பட தாதுக்கள் உள்ளதால், மாடுகள் விரும்பி உண்கின்றன.
சித்திரை, ஆடி, புரட்டாசி, கார்த்திகை ஆகிய நான்கு பட்டங்களில் இதை விதைக்கலாம். ஒரு கிலோ விதை, 73 ரூபாய். மானியம், 30 ரூபாய் போக, ஒரு கிலோ, 43 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள், சோமனுார் துணை வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
மேலும்
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
-
போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்
-
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை