நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்

6

​வாஷிங்டன்: ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், நவீன காலத்தின் தாமஸ் எடிசன் எனவும், நாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் எனவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.

வாஷிங்டனில் நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், அமெரிக்காவின் சிறந்த அறிவியலாளருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, ‛தேசிய அறிவியல்' பதக்கத்தை, எலான் மஸ்க்கிற்கு வழங்கி அதிபர் டிரம்ப் கவுரவித்தார். ​மேலும், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், என்விடியா சி.இ.ஓ., ஜென்சன் ஹுவாங், ஏ.எம்.டி., சி.இ.ஓ., லிசா சு ஆகியோருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சத்ய நாதெள்ளா மற்றும் டெல் நிறுவனர் மைக்கேல் டெல் ஆகியோருக்கு, தேசிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான பதக்கம் வழங்கப்பட்டது.
Latest Tamil News
நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது: எலான் மஸ்க், நவீன காலத்தின் தாமஸ் ஆல்வா எடிசன். தொழில்நுட்ப உலகின் அசுரனான அவர் ஒரு சிறந்த மேதை. விண்வெளி தொழில்நுட்பம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பு, உலகையே புரட்டிப் போட்டுள்ளது. அறிவியல் வரலாற்றின் பக்கங்களில் இவருடைய பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும், இவ்வாறு அவர் பாராட்டினார்.

விருது பெற்ற ஆறு பேரில், ஐந்து பேர் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@block_Y@ * சத்ய நாதெள்ளா - இந்தியா

* எலான் மஸ்க் - தென் ஆப்ரிக்கா

* செர்ஜி பிரின் - ரஷ்யா

* ஜென்சன் ஹுவாங் - தைவான்

* லிசா சு - தைவான்block_Y

Advertisement