போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
புதுடில்லி: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களை உடனடியாக நீக்குமாறு, சம்பந்தப்பட்ட வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான டீப்பேக் வீடியோக்களும், உண்மைக்கு மாறாக திட்டமிட்டு எடிட் செய்யப்பட்ட பதிவுகளும் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பழைய போட்டோக்கள் மற்றும் பழைய வீடியோக்களை, தற்போது நிகழ்ந்தது போல சித்தரித்து வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளது.
இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உண்டாக்கி, அமைதியை சீர்குலைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற போலியான பதிவுகளைக் கண்டறிந்து உடனடியாக நீக்க, சமூக வலைதள நிறுவனங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசு அமைப்புகள் மற்றும் துறைகள் சுட்டிக்காட்டும் ஆட்சேபகரமான பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை காலதாமதமின்றி நீக்க வேண்டும். இவ்வாறு சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதைவிட போலி வீடியோ மற்றும் போலி செய்திகளை பரப்புவோருக்கு மரண தண்டனை தவிர வேறு தண்டனை இல்லை என்ற சட்டத்தை கொண்டு வாருங்கள். அதுவும் 1 வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும். இது தான் ஒரே வழி.மேலும்
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்
-
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை
-
கோவையில் காட்டுக்குள் சட்ட விரோதமாக செயல்பட்ட 13 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு