ஓவியம் வரைவதில் லடாய்: நெடுஞ்சாலைத்துறை தடை
சுங்கம்: திருச்சி ரோடு மேம்பாலத் துாண்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க, ஓவியம் வரையும் பணியை மாநகராட்சி துவக்கியது. அதன் ஓரத்தில் தனியார் நிறுவன விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், ஓவியம் வரையும் பணியை நிறுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்ட போது, 'எங்களுக்கு சொந்தமான ரோட்டை அனுமதியின்றி, மாநகராட்சி தோண்டுகிறது. சீரமைப்பதும் இல்லை. இது பற்றி மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளோம். திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டியபோது, துாண்களில் ஓவியம் வரைய திட்டமிட்டோம்.
வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பும் வகையில் எவ்விதத்திலும் விளம்பரமோ, ஓவியமோ வரையக்கூடாது என அறிவுறுத்தியதால் கைவிட்டோம். மாநகராட்சி சார்பில் ஓவியம் வரைந்து, அதன் ஓரத்தில் விளம்பரம் செய்வது தவறு. அதை சுட்டிக்காட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மையத்தடுப்பில் செடிகளுக்கு இடையே சிறிய அளவில் விளம்பர பலகை வைப்பதும் தவறு' என்றனர்.
மேலும்
-
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!