பள்ளி ஆசிரியர்களுக்கு விருது
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜக்கார்பாளையம் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்து விருது வழங்கப்ப்டடது.
கோவை லயன்ஸ் இன்டர்நேஷனல் கிளப் சார்பில், மதிப்புரு ஆசிரியர்கள், சிறந்த பள்ளிக்கான விருது ஜக்கார்பாளையம் எம்.என்.எம்., உயர்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. அதில், பள்ளி தலைமையாசிரியர் முருகானந்தம், பட்டதாரி ஆசிரியர்கள் நாராயணசாமி, மாசிலாதேவி, சியாமளாதேவி, ஜெயலட்சுமி, அனுசுயாதேவி ஆகியோருக்கு மதிப்புரு ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
பள்ளியின், 100 சதவீதம் தேர்ச்சி, குறைவான இடைநிற்றல், சொந்த செலவில் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றது; ஆசிரியர்களின் சொந்த செலவில் ஐந்து பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு கற்பித்தல் பணி செய்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்கள் பாராட்டினர்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பள்ளி வளாகத்தை பசுமையாக மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
-
போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்
-
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை