வங்கதேசம் ரன் குவிப்பு

அபுதாபி: அபுதாபி டெஸ்ட் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 317/8 ரன் எடுத்திருந்தது.
ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நேற்று துவங்கியது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு ஷாத்மன் இஸ்லாம், தன்ஜித் ஹசன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் பவுண்டரிகளாக விளாச, வேகமாக அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 22.5 ஓவரில் 124 ரன் சேர்த்த போது, தன்ஜித் (83 ரன், 71 பந்து) அவுட்டானார். ஷாத்மன் 67 ரன்னில் வெளியேறினார்.
மோமினுல் (39), கேப்டன் நஜ்முல் (29) சீரான இடைவெளியில் அவுட்டாகினர். 'சீனியர்' முஷ்பிகுர் 'டக்' அவுட்டானார். மெஹிதி ஹசன் (24) நிலைக்கவில்லை. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீரர் லிட்டன் தாஸ் (53) அரைசதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 317/8 ரன் எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின், சலீம், இஸ்மத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement