டென்னிஸ்: அரையிறுதியில் மாயா
லாகோஸ்: ஐ.டி.எப்., டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் மாயா முன்னேறினார்.
போர்ச்சுகலின் லாகோஸ் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி, இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற சீன வீராங்கனை தியன் ஜியாலினை எதிர்கொண்டார்.
முதல் செட்டை மாயா 6-2 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டை 6-1 என வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 42 நிமிடம் நடந்த இப்போட்டியில் மாயா, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் இத்தொடரின் 'நம்பர்-3' வீராங்கனை, நெதர்லாந்தின் பிரிட் டு பிரீயை சந்திக்க உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement