சென்னை மாணவியர் ஜிம்னாஸ்டிக்கில் அசத்தல்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. மாவட்ட போட்டிகள் முடிந்து மண்டல அளவில் மாணவ - மாணவியர் மோதி வருகின்றனர். இதில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள், வேளச்சேரி ஏ.ஜி.பி., வளாகத்தில் நடந்தது.

மாணவியர் 'பேலன்ஸ் பீம்' பிரிவில், சென்னையின் யாழினி, 16, முதல் இடத்தையும், ஜெஸ்ஸி, 14, இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். 'ப்ளோர் எக்சர்சைஸ்' பிரிவில் சென்னையின் ஆனந்தி, 16, முதலிடம்; கீத், 13, இரண்டாம் இடம் பிடித்தனர்.

'டேபிள் வால்ட்' பிரிவில், சென்னையின் தியா, 17, கிருஷ்ணவேணி, 17, முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 'அன் ஈவன் பார்' பிரிவில் சமாரா, 16, முதல் இடத்தையும், வர்ஷினி, 14, இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

Advertisement