நாமக்கல் அரசு கல்லுாரியில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
நாமக்கல்,:நாமக்கல்
அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் மற்றும்
போதைப்பொருள் தடுப்பு மன்றம் சார்பில், மாணவர்களின் வாய்நலம் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாய்நல மருத்துவம் மற்றும் வாய்
புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர்
கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சங்க மாவட்ட
செயலரும், போதைப்பொருள் தடுப்பு மன்றம் மற்றும் சாலை பாதுகாப்பு மன்ற
தொடர்பு அலுவலருமான ராஜேஷ் கண்ணன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார்.
திருச்செங்கோடு
தனியார் பல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்
பொதுநல பல் மருத்துவ துறைத்தலைவர் பிரகாஷ், மாணவர்களுக்கான வாய்நல
விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, பற்களை முறையாக
பராமரிக்கும் வழிமுறைகள், பற்சொத்தையை தடுக்கும் முறைகள், பற்சொத்தை
ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் மற்றும் வாய்ச்
சுகாதாரத்தை பேணுவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து,
மருத்துவ குழுவினர் இணைந்து மாணவர்களுக்கு வாய்நல பரிசோதனை மற்றும்
வாய் புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பொருளியல் துறை தலைவர் மாதவன், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்
சந்திரசேகரன், மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர்
கலந்துகொண்டனர்.