குடிப்பழக்கத்தால் வாலிபர் பரிதாப பலி

ப.வேலுார்:ப.வேலுாரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ராகுல், 26; மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.

அவரது குடிப்பழக்கத்தை விடுவிப்பதற்காக, குடும்பத்தினர் கடந்த, இரு தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று, மறுவாழ்வு மையத்தில் இருந்த ராகுலுக்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதுகுறித்து மைய நிர்வாகிகள் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராகுல் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ப.வேலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement