எனது பயணம் அடுத்த மாதத்துடன் முடிகிறது: தீவிர அரசியலிலிருந்து விலகுகிறார் திரிபுரா அரச குடும்ப வாரிசு
அகர்தலா: திரிபுரா அரச குடும்ப வாரிசும், திப்ரா மோதா கட்சி தலைவருமான பிரத்யோத் கிஷோர் தேபர்மா, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக திப்ரா மோதா கட்சி செயல்படுகிறது. இதன் தலைவராக திரிபுரா மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் கிஷோர் தேபர்மா உள்ளார். திரிபுரா பழங்குடியினர் பகுதிகளில் உள்ள கிராம குழுக்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் தேபர்மாவின் திப்ரா மோதா கட்சி குறிப்பிடத்தக்க இடங்களில் வென்றது.
இந்நிலையில், தேபர்மா கூறியதாவது: வரும் நவம்பர் உடன், அடுத்த மாதம் என் அரசியல் பயணத்தை முடித்துக்கொள்கிறேன். இந்த முடிவு, உடல்நலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புடன் தொடர்புடையது. ஆனால், மக்களுடன் தொடர்ந்து இருப்பேன். அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படும்போது குரல் கொடுப்பேன். தேர்தல் அரசியலில் மட்டும் இருக்க மாட்டேன்.
கிராம குழுக்களுக்கான தேர்தல் வெற்றி எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல. பல ஆண்டுகளாக தேர்தலை சந்திக்க முடியாமல் இருந்த கிராம மக்களின் வெற்றி இது. கிராம குழு தேர்தல் வெற்றியை கொண்டாடுகிறீர்கள். ஆனால், உண்மையான கொண்டாட்டம் இன்னும் வரவில்லை. திப்ரா ஒப்பந்தத்தின் வாயிலாக பழங்குடியினர் தங்கள் உரிமைகளை பெறும் போது தான் உண்மையான கொண்டாட்டம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; தாராபுரம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
மேற்கு வங்கத்திலும் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜ ; நந்திகிராமில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
-
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்
-
ரீல்ஸ்க்கு மயங்கி ஆளுங்கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போட்டனர்: இபிஎஸ்
-
அரசியல், தனிமனித நாகரிகத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் விஜய்