மேற்கு வங்கத்திலும் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜ ; நந்திகிராமில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
நந்திகிராம்: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த ரெஜிநகர் மற்றும் நந்திகிராம் தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது.
ரெஜிநகர் தொகுதி, ஏஜேயுபி கட்சியின் ஹூமாயூன் கபீர் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்று. அவர் ராஜினாமா செய்த நிலையில் நடந்த தேர்தலில், பாஜ வேட்பாளர் சர்கார் 1,29,914 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஏஜேயுபி வேட்பாளர் குலாம் நபி ஆசாத்தை விட, சுமார் 75 ஆயிரம் ஓட்டு அதிகம் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அப்துல்லாஹில் கைப் வெறும் 2,893 ஓட்டுடன் 3வது இடத்தையும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் ரபியுல் ஆலம் சவுத்ரி வெறும் 2,862 ஓட்டு பெற்று 4வது இடத்தை பிடித்தது.
நந்திகிராம் தொகுதி, முதல்வர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்று ராஜினாமா செய்த தொகுதி. இங்கு பாஜ வேட்பாளர் ஹசிராணி ராத், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 753 ஓட்டு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றார். மொத்தமாக இவர், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 427 ஓட்டு வாங்கினார். காங்கிரஸ் வேட்பாளர் மிலின் பிரதான் 41,674 ஓட்டு பெற்றார். வெற்றி பெற்ற பாஜ வேட்பாளர்களுக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி வாழ்த்து தெரிவித்தார்.
அசாமின் நாகோன் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், பாஜவின் தேவசிஷ் ஷர்மா, ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பத்ருதின் அஜ்மலை விட ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்றுள்ளார். மொத்தமாக அவர் 4 லட்சத்து 20 ஆயிரத்து 705 ஓட்டு பெற்று முன்னிலையில் உள்ளார். பத்ருதின் அஜ்மல் 3 லட்சத்து 10 ஆயிரம் ஓட்டு பெற்று 2வது இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் சிபமோனி போரா 76 ஓட்டுடன் 3வது இடத்தில் உள்ளனர். இந்த தொகுதி, கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும்.
@block_B@
பிரதமர் மோடி நன்றி
தேர்தல் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மக்களின் தொடர்ச்சியான ஆசிர்வாதங்களுக்கு நன்றி. அசாமின் நகோன் லோக்சபா தொகுதி, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜி நகர் சட்டசபை தொகுதிகளில் கிடைத்த வெற்றியானது, பாஜ தலைமையிலான தேஜ கூட்டணியின் சிறந்த நிர்வாகத்திற்கான திட்டம் மற்றும் அடித்தட்டு மக்களுடன் உள்ள தொடர்பை காட்டுகிறது. வெற்றி பெற்ற பாஜ வேட்பாளர்களுக்கும், கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில் தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரையும் பாராட்டுகிறேன்.மக்களின் நலனுக்காகவும், ஒளிமயமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும் நாங்கள் அயராது உழைக்கும்போது, இந்த உத்தரவு எங்களுக்குக் கூடுதல் பலம் அளிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார். block_B
கரப்பான் கூட்டம் எங்கே...?மேலும்
-
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!