இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; தாராபுரம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-நமது நிருபர்-
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் களம் கண்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, இடைத்தேர்தலில் தவெக சார்பில் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தல், தற்போது இடைத்தேர்தலில் பெற்ற ஓட்டுக்கள் குறித்து ஓர் சிறப்பு அலசல்!
கடந்த 2026 சட்டசபைத் தேர்தலில், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். பிறகு தனது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தார். திருப்பூர் மாவட்டத்தின் மிகப்பெரிய சட்டசபைத் தொகுதியாக விளங்கும் தாராபுரத்தில், 1951 முதல் இதுவரை 16 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது.
இதில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2016ல் காங்கிரஸ் வென்ற நிலையில், 2021-ல் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் முருகனை தோற்கடித்து தி.மு.க. வேட்பாளர் கயல்விழி வெற்றி பெற்றார். 2026-ல் மீண்டும் அ.தி.மு.க. இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது.
சத்தியபாமாவின் திடீர் ராஜினாமா தொகுதி மக்களிடையே அதிருப்தியையும், அரசியல் கட்சிகளிடையே புதிய கணக்குகளையும் உருவாக்கியதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனாலும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 66 ஆயிரத்து 841 ஓட்டுகள் பெற்று, 9,471 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எவ்வளவு, தற்போது இடைத்தேர்தலில் பெற்றுள்ள ஓட்டுக்கள் எவ்வளவு என்பது குறித்து படத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
அதனைப் பார்த்து, கடந்த சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, தவெக பெற்றுள்ள ஓட்டு எவ்வளவு, தற்போது இடைத்தேர்தலில் பெற்றுள்ள ஓட்டுக்கள் எவ்வளவு என்பதை சதவீதத்துடன் அறிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து (2)
Prem Kumar - ,
09 அக்,2026 - 19:44 Report Abuse
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று இரண்டு தொகுதி தவெகவிற்கு கிடைத்திருந்ததாலும் வோட்டளித்த மொத்த வாக்காளர்களில் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் எதிர்த்தே வாக்களித்து இருக்கிறார்கள் என்பதும் தெளிவு
மதுராந்தகம் தொகுதியில் பதிவான 184423 வாக்குகளில் அவருக்கு கிடைத்தது 72139 ஆதாவது சுமார் 39 சதவிகிதம் மட்டுமே . ஆனால் அவருக்கு எதிராக வாக்காளித்தவர்கள் 112500 அதாவது 61 சதவிகிதம்.
தாராபுரம் தொகுதியில் பதிவான 179337 வாக்குகளில் தவெக வேட்பாளருக்கு கிடைத்தது 66841 வாக்குகள் அதாவது 37 சதவிகிதம். ஆனால் எதிர்த்து வாக்களித்தவர்கள் 112496 அதாவது 63 சதவிகிதம்.
எனவே இரண்டு தொகுதிகளிலும் 61 சதவிகித வாக்காளர்கள் நிராகரித்தால் இரண்டு வேட்பாளர்களும் அவர்களது வெற்றியை கொண்டாட எந்த வகையிலும் அருகதை இல்லாதவர்கள். 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
09 அக்,2026 - 19:37 Report Abuse
அம்மா ஜெ அவர்களை எப்போதுமே மேடம் என்றுதானே அழைக்கின்றார். அதனால்தான் அந்த தொகுதி மக்கள் விஜய்யை அம்மாவின் மகனாகவே பாவித்து வாக்களித்துள்ளார்கள் . பழனிசாமி ஊர் ஊராக தெரு தெருவாக பிரச்சாரம் செய்தும் சென்ற முறையை காட்டிலும் இந்த முறை குறைவாக வாக்குகள் பெற்று தோல்வியை அடைந்துள்ளார். இனி அவர் டஜன் தோல்வி பழனிச்சாமி என்றே அழைக்கப்படுவார் 0
0
Reply
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா: மலையில் கதம்ப சாதம் சமைக்க தடையால் மக்கள் கொதிப்பு
-
நடிகர் நானா படேகர் மரணத்தில் மர்மம்; வழக்குப் பதிந்தது கோவா போலீஸ்
-
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
Advertisement
Advertisement