லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்

சென்னை: தமிழகத்தில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதன்படி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜூடம், தாம்பரம் போலீஸ் கமிஷனர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த அருண், ஜூலை மாதம் மாற்றப்பட்டார். அதன் பிறகு இப்பொறுப்பை, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மகேஸ்வரி கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது புதியஇயக்குனர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Advertisement