சொத்து விபரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
- நமது நிருபர் -
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களை வரும், 31ம் தேதிக்குள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாாண்மை அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பதவி உயர்வுக்கான பட்டியலில் பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் கடந்த, 5ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும் சொத்துக்கள், அசையாக சொத்துக்கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விபரங்களையும், வரும், அக்., 31ம் தேதிக்குள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேறு யார் பெயரிலும், அரசு ஊழியர்கள் சொத்துக்கள் வாங்கியிருந்தாலும், அவற்றையும் குறிப்பிட்டு, அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர்கள் பெயர்கள் தான், அவர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம் பெறும். சொத்து விபரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியதாகவும் கருதப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த, 2010ல், தி.மு.க., ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரை அடிப்படையில், 'அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த மூன்று மாதத்துக்குள் தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். 'பின், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தான், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு, அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை, வீடுகள், நிலங்கள், நகைகள், கார், இருசக்கர வாகனங்கள், ரொக்கம், கடன் என, அனைத்து விபரங்களையும் அக்., 31க்குள், அரசு இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள், பினாமி பெயரில் உள்ள சொத்துக்கள் உட்பட, அனைத்து சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் பதவி உயர்வு கிடையாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (20)
கேயார் - ,
08 அக்,2026 - 10:43 Report Abuse
தபால் ஓட்டை த.வெ.கவுக்கு அள்ளிப் போட்டது நீங்கதானே? வச்சான் பாரு தற்குறி உங்களுக்கு ஆப்பு! 0
0
Reply
Rajarajan - ,இந்தியா
08 அக்,2026 - 09:43 Report Abuse
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? தனியார் ஊழியர்கள் நாங்கள் எந்த அதிர்ச்சியும் அடைந்ததாக இல்லையே. அதுசரி, இணைவி, துணைவி, பெஸ்ட்டி, மாமியார், மச்சினன், தம்பி, ஒன்னுவிட்ட சொந்தம், இப்படி எல்லாம் கூடத்தான் சொத்து / பணம் / நகை கைமாறி இருக்கும். அதையெல்லாம் சொல்வார்களா என்ன ?? 0
0
Reply
ஆரூர் ரங் - ,
08 அக்,2026 - 08:44 Report Abuse
விஜய் தேர்தல் வழக்கில் கூறப் lபட்டது போல சில லட்சங்கள் வேறுபாடு இருந்தால் மன்னித்து பதவியுயர்வு அளிப்பார்களா?
அல்லது முதலமைச்சருக்கு மட்டும் ஏதாவது விதிவிலக்கு உண்டா? 0
0
Reply
பேசும் தமிழன் - ,
08 அக்,2026 - 08:13 Report Abuse
அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டுமானால்... இப்படி தான் கடிவாளம் போட வேண்டும். 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08 அக்,2026 - 07:57 Report Abuse
அதேபோல் அரசியல்வாதிகளுக்கும் செய்ய வேண்டும். அவர்களும் சொத்து விவரங்கள் கொடுக்கவேண்டும். 0
0
பேசும் தமிழன் - ,
08 அக்,2026 - 08:16Report Abuse
அவர்கள் தான் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அந்த விவரங்களை கெடுக்கிறார்களே...
ஸ்டாலின் தன்னிடம் 10000 ரூபாய் தான் பணம் இருக்கிறது என்று கூறினாரே ? 0
0
Reply
GMM - KA,இந்தியா
08 அக்,2026 - 07:47 Report Abuse
அரசு பணியில் சேரும் முன் asset liabilities தாக்கல் கட்டாயம். அதன் பின் ஓய்வு பெறும் வரை சமர்ப்பிக்க வேண்டும். ஊழியர்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால், பணி விதியில் என்ன தண்டனை என்று இருக்க வேண்டும். அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அரசாணை குழப்பம் தரும். தற்போது தொகுதி உறுப்பினர்கள் சம்பளம், பென்ஷன் பெறுவதால் அவர்கள் அனைவரும் சொத்து விவரம் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் பென்ஷன் நிறுத்த வேண்டும். 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
08 அக்,2026 - 07:28 Report Abuse
அரசின் அறிவிப்பு வரவேற்க தக்கது. அதுபோல லஞ்ச லாவண்ய செயல்களில் ஈடுபடுவோருக்கு, பதவி உயர்வு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது தங்களது பிறப்புரிமை என்று கருதி, கூகுள் பே மூலம் தற்போது லஞ்சம் பெறுகின்றனர். 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
08 அக்,2026 - 07:21 Report Abuse
நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஒரு மனைவி இருக்கும்போது இரண்டாவது செட் அப் செய்தால் தண்டனை என்றார்கள். தீய சக்தி கட்சியில தலைவன் முதல் துண்டன் வரை ஆளுக்கு மூணு. 0
0
Reply
Yazhini Muruganantham - ,இந்தியா
08 அக்,2026 - 06:41 Report Abuse
அதிக கடன் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு முன்னுரிமை தருவார்களோ ? 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
08 அக்,2026 - 04:35 Report Abuse
உச்சநீதிமன்றத்திலேயே இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்களே. 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
Advertisement
Advertisement