ராகுல் கைதை கண்டித்து மறியல் முன்னாள் முதல்வர் உட்பட 50 பேர் கைது
புதுச்சேரி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கைதை கண்டித்து, புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் உட்பட 50க்கும் மேற்பட்ட காங்., கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்., நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் கண்டித்து, புதுச்சேரி ராஜா தியேட்டர் அருகில் மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் காங்., கட்சியினர் நேற்று இரவு 9:10 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் உட்பட 50க்கும் மேற்பட்ட காங்., கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
மேற்கு வங்கத்திலும் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜ ; நந்திகிராமில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
-
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்
-
ரீல்ஸ்க்கு மயங்கி ஆளுங்கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போட்டனர்: இபிஎஸ்
-
அரசியல், தனிமனித நாகரிகத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் விஜய்
-
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; ஸ்டாலின் குமுறல்
-
இடைத்தேர்தல் வெற்றி; அமைச்சர்களுடன் தனது பாணியில் கொண்டாடிய முதல்வர் விஜய்