துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; ஸ்டாலின் குமுறல்
இடைத்தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கை; டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதல்வர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதல்வர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம்.
தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதல்வருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
'எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்' என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதல்வர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதல்வர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பிரசாரத்தை பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழகத்திற்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
துர்நாற்றம் வீசுவது தொடக்கம் முதலே டீம்கா என்ற குடும்ப சாக்கடை தான். அது அரசியல் அமைப்பே அல்ல. ஒரு குடும்பம் கையில் உள்ள ஒரு பெரிய கொள்ளை கும்பல் அப்படீங்கறாங்க.
! வயிறு பற்றி கொண்டு எரிகிறது பாவம் . இரண்டு லிட்டர் ஜெலுசில் வாங்கி அனுப்பவும். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. உங்கள் கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற போது உங்களுக்கு எதிராக விழுந்த வாக்குகள் அதிகமாக தான் இருந்தது. அதே நிலை தான் இப்போதும்.
உங்க கூட்டத்தப் போல மக்கள் விரோத
களவாணி கும்பல் உலகத்துலேயே கிடையாதுன்னு எல்லாருக்கும் தெரியுமே.
ரெண்டாவது இடத்திற்கு வந்ததே பெரும் ஆச்சரியம் தான். இந்த லட்சணத்தில், சந்தோச குமுறல். இனி இப்படியே சந்தோஷமாக குமறிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.
உனக்கு நிரந்திர தோல்வி
தினமலர் ஒரு பெரிய கட்டுரையை வீணாக்கி விட்டது...மேலும்
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; தாராபுரம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
மேற்கு வங்கத்திலும் இரு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜ ; நந்திகிராமில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
-
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்
-
ரீல்ஸ்க்கு மயங்கி ஆளுங்கட்சிக்கு மக்கள் ஓட்டுப்போட்டனர்: இபிஎஸ்
-
அரசியல், தனிமனித நாகரிகத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் விஜய்