டாஸ்மாக் மதுக்கூடத்தில் மாமூல் கேட்ட போலீஸ்காரர் உட்பட 4 பேர் மீது வழக்கு

துாத்துக்குடி:

டாஸ்மாக் மதுக்கூடத்தில் மாமூல் கேட்டு மிரட்டியதாக போலீஸ்காரர் மற்றும் அவரது நண்பர்கள், மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

துாத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மதுக்கூடத்துடன் இணைந்த டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 32, என்பவர் தன் தந்தை கண்ணன் பெயரில் அதை நடத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன், மதுக்கூடத்திற்கு சென்ற திருப்பத்துார் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் துாத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த போலீஸ்காரர் பென்சிங், 43, அவரது நண்பர் மதன், 48, ஜோஷ்வா, 32, ரமேஷ், 31, ஆகியோர் மாதந்தோறும், 10 ரூபாய் மாமுல் தர வேண்டும் என, வெங்கடேசனை மிரட்டி உள்ளனர்.

மாமூல் தராவிட்டால் மதனிடம் ஒப்படைத்து விடவும் என, மிரட்டி உள்ளனர். கடந்த 5ம் தேதி மதுக்கூடத்துக்கு சென்ற பென்சிங் உட்பட, நால்வரும், 50 ஆயிரம் ரூபாய் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தென்பாகம் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், பென்சிங் உட்பட, நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, தன் உயிருக்கு பாதுகாப்பில்லை, நால்வரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வெங்கடேசன் மனு அளித்தார்.

Advertisement