உலக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் ராமநாதபுரம் கல்லுாரி பேராசிரியர்
ராமநாதபுரம்: உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி துணை பேராசிரியர் செந்தில் மணிராஜன், 45, இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர், 2025 - 26ம் ஆண்டின் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை அக்., 7ல் வெளியிட்டனர். அறிவியல் துறை சார்ந்த, 22 ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்ற அந்த பட்டியலில், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்த ஆராய்ச்சியாளர் செந்தில் மணிராஜன் இடம் பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் இயற்பியல் துறை துணை பேராசிரியராக பணியாற்றும் இவர், 'ஆப்டிகல் பைபர்' வாயிலாக வெவ்வேறு வகை சென்சார்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி இதழ்களில், 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
இந்தாண்டு இவரது குவாண்டம் இயற்பியல் புத்தகம், கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. மீன்களை பதப்படுத்த பயன்படுத்தும் 'பார்மலின்' என்ற வேதிப்பொருளை கண்டறியும் சென்சாரை செந்தில் மணிராஜன் வடிவமைத்தார். உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து, ஐந்தாவது முறையாக இவர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு. மிகச் சிறப்பு. அதுவும் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக பெருமைமிகு விஞ்ஞானிகள் பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளது சிறப்பு.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவில் அப்துல்கலாம் அய்யாவின் பெருமையை பறைசாற்ற அதேதீவின் மற்றுமொரு விஞ்ஞானி
திரு செந்தில் மணிராஜன் அவர்கள் வாழ்க சகோதரா வளர்க உன் பணி
ஐயா அப்துல் கலாம் வாழ்ந்த பூமி அந்தப் பெருமை பறைசாற்றும் விதமாக இன்னொரு மாமனிதர் ராமநாதபுரத்தில் இருந்து
Amazing. He has not studies in prestigious universities in foreign countries or in India but has won laurels internationally. Such gems require special attention and nurturing for the benefit of the country.
இவ்வாறு திறன் உள்ள 10 விஞ்ஞானிகளை ஊக்குவித்து அவர்களின் கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்தினால் தமிழகம் இந்தியா உலகத்தின் முன்னோடியாக இருக்கும் ஆனால் நாம் 1200 கோடிக்கு தலைமைச் செயலகம் கட்டுவோம் அதுவும் வேண்டாத போது ஆனால் இவ்வாறு கடின உழைப்பாளர் தன் திறமையாலும் உலகம் தான் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானிகளை ஊக்குவிக்க மாட்டோம் என்னடா உலகம் இது மாயை உலகம் சினிமாக்காரன் டிங்கி டிங்கி என்று ஆடினால் அவனுக்கு ஓட்டு .ஒரு பெரிய விஞ்ஞானி அவனை யாரும் கண்டு கொள்வதில்லை
திரு பாலன் பழனியப்பன்... இவர் கடந்த 5 ஆண்டாக தேர்ந்து எடுக்க பட்டுள்ளார்..
தேர்தல் கருத்துக்கணிப்பு மாதிரி இருக்கே
ஒரு இந்திய தமிழரின் ஆக்கபூர்வமான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் பெருமை பெருமை கொள்ளத்தக்கது. வாழ்த்துக்கள்.
என்னாது நம்ம ஊழல் விஞ்ஞானிக்கு முதல் இடமில்லையா? அய்யகோமேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்