‘விவசாய சங்க கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றிருந்தால் இடைத்தேர்தல் நடந்திருக்காது’
அரூர்: ‘‘தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியிருந்தால், தாராபுரம், மதுராந்தகத்திற்கு இடைத்தேர்தல் நடந்திருக்காது,’’ என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், காவிரி உரிமை மீட்பு மற்றும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மொடக்குறிச்சி தொகுதியில், 1,033 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அப்போது, ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜினாமா செய்து, அதனால் வரும் இடைத்தேர்தலில், அவரே மீண்டும் வேறு கட்சியில் போட்டியிட்டால் அந்த தேர்தலுக்கான செலவுத்தொகையை அந்த வேட்பாளரோ அல்லது அவர் சார்ந்த கட்சி ஏற்க வேண்டும்.
அதேபோல், இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தாலும், இடைத்தேர்தல் செலவை சம்மந்தப்பட்ட வேட்பாளர் ஏற்க வேண்டும் என, தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தினோம்.
அதை கொண்டு வந்திருந்தால், தற்போது, தாராபுரம், மதுராந்தகத்திற்கு இடைத்தேர்தல் நடந்திருக்காது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மத்தியில் ஆள்பவர்கள் கட்சி மாறுவது அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் அத்தகைய திருத்தங்களை சட்டத்தில் செய்ய மாட்டார்கள்,மேலும்
-
உலக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் ராமநாதபுரம் கல்லுாரி பேராசிரியர்
-
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு
-
காட்டுயானைகள் முகாம்
-
போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
-
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி