மான் வேட்டையாட முயன்றவர் சிக்கினார்
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், விளாமுண்டி வனக்காப்பாளர் ஆனைமலை தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் பவானிசாகர் அருகே, வெள்ள மொக்கை வனப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒருவர், நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் நுழைந்து, மான் வேட்டையாடுவதற்காக புதர் மறைவில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. வனத்துறையினர் அவரை பிடிக்க முயற்சித்த போது, கற்கள் மற்றும் துப்பாக்கியின் பின்பகுதியில் தாக்கியதில், வேட்டை தடுப்பு காவலர்கள் அறிவரசு, உதயசீலன் ஆகியோர் காயமடைந்தனர்.
தப்பி ஓட முயற்சித்தவரை பிடித்து விசாரித்த போது, புளியம்பட்டி அடுத்த, கோட்டை பாளையத்தை சேர்ந்த செந்தில், 46, என்பதும், அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி, வன விலங்குகளை வேட்டையாட முயற்சித்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த வனத்துறையிர், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காயமடைந்த இரு வேட்டை தடுப்பு காவலர்கள், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்
-
உலக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் ராமநாதபுரம் கல்லுாரி பேராசிரியர்
-
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு
-
காட்டுயானைகள் முகாம்
-
போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
-
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி