என்.எல்.சி.,யில் ‘எம்.–சாண்ட்’ விற்பனை துவக்கம்
நெய்வேலி: என்.எல்.சி., நிறுவனம், எம்.சாண்ட் விற்பனையை துவங்கியுள்ளது.
என்.எல்.சி.,யின் சுரங்கம்-–1 ல் உள்ள மேலடுக்கு மண்ணிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மணலின் (எம்–-சாண்ட்) முதல் வணிக ரீதியான விற்பனையை அந்நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் கொடியசைத்து துவக்கி வைத்தார். சுரங்கத்துறை செயல் இயக்குநர் ஜாஸ்பர் ரோஸ், பொது மேலாளர்கள் குமார், அறிவழகன் மற்றும் அதிகாரிகளின் உடனிருந்தனர்.
என்.எல்.சி., வரலாற்றில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ள இம்முயற்சியானது, வளப் பயன்பாடு, சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான சுரங்கத் தொழில் ஆகியவற்றை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகத் திகழ்கிறது. பி.ஐ.எஸ்.,தரச்சான்றிதழ் பெற்ற என்.எல்.சி., நிறுவனத்தின் இந்த மணல், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்புதலையும் பெற்றுள்ளதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாடுகளுக்கு முழுமையாக இணங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எம்–-சாண்ட் விற்பனைத் தொடக்கமானது 'கழிவிலிருந்து செல்வம்' என்ற என்.எல்.சி.,யின் இலக்கு, மேலடுக்கு மண்ணை மதிப்பு கூட்டப்பட்ட கட்டுமானப் பொருளாக மாற்றுவதன் மூலம் நிலையான வளப் பயன்பாட்டின் மீதான நிறுவனத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், இந்திய அரசின் தூய்மைப் பணிகளை முறைப்படுத்துதல் வள மேலாண்மையில் புதுமையான சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தவெக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
-
நானா படேகரின் இறுதிச்சடங்கை இரவில் நடத்தியது ஏன்? மகன் சொன்ன காரணம்
-
சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய்
-
தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்; காங்கிரஸ் கோரிக்கையை டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
புற்றுநோய் மருந்துகளின் விலை குறைகிறது; மத்திய அரசு அதிரடி