புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க ஆலோசனை கூட்டம்
கரூர்:கரூர்
அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில்,
வீடு ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கொளந்தா கவுண்டனுாரில்
நடந்தது.
கரூர் அருகே கொளந்தா கவுண்டனுாரில், அரசு சார்பில்
கட்டப்பட்ட, பழைய அடுக்கு மாடி குடியிருப்புகள் இடித்து
அகற்றப்பட்டது. பிறகு கடந்த, 2023ல், 13 கோடி ரூபாய் மதிப்பில், 125
அடுக்கு மாடி வீடுகள் கட்ட பணிகள் தொடங்கியது. தற்போது, பணிகள் நிறைவு
பெற்றுள்ளது.
இதையடுத்து, நேற்று காலை கொளந்தானுாரில்
அடுக்குமாடி குடியிருப்பில், வீடு ஒதுக்குவது தொடர்பாக ஆலோசனை
கூட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி
செயற்பொறியாளர் ஹீரா தலைமையில்
நடந்தது.
அதில், கடந்த
இரண்டாண்டுகளுக்கு மேலாக, ஏற்கனவே குடியிருந்தவர்கள் வாடகை
வீட்டில் குடியிருப்பதால், விரைவாக வீடு ஒதுக்கி, குடியேற வசதி செய்து
தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், வீடு
ஒதுக்கப்படாத எட்டு குடும்பங்களுக்கும், வீடு ஒதுக்க வேண்டும் என,
உதவி செயற்பொறியாளர் ஹீராவிடம் பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர். அப்போது, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, புதிய
குடியிருப்பு திறக்கப்பட்டு, வீடுகள் முறைப்படி ஒதுக்கீடு
செய்யப்படும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மேலும்
-
வட மாநில தொழிலாளர்களுக்கு எளிதாக புரிய ஹிந்தியில் தகவல் தருவதில் தவறு இல்லை: தொழில் துறையினர் கருத்து
-
ராகுல் சந்திப்பை தவிர்க்கும் விஜய்; பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பு
-
மொத்த கவனமும் நாற்காலியை காப்பாற்றுவதில் தான்: முதல்வர் விஜயை விமர்சிக்கும் ஸ்டாலின்
-
மதமாற்றத்திற்கு வெளிநாட்டு நிதி; இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
-
தினமலர் செய்தி எதிரொலி; ஜமாத் அறிவிப்பு பலகை அகற்றம்
-
கடிந்து கொண்டார் கணவர்; கவுரவித்தது திரையுலகம்