மொத்த கவனமும் நாற்காலியை காப்பாற்றுவதில் தான்: முதல்வர் விஜயை விமர்சிக்கும் ஸ்டாலின்
சென்னை: 'முதல்வர் விஜயின், கவனம் மொத்தமும், தன் நாற்காலியை காப்பாற்றுவதிலேயே இருக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஸ்டாலினின் நேற்றைய அறிக்கை: குற்றவாளிகள் தைரியமாகவும், பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்கு, தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில், 19 வயது இளைஞர் சத்தியசீலன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணியில், 17 வயது மகளுக்கு, தொல்லை கொடுத்தவர் மீது, போலீஸ் நிலையத்தில் புகாரளித்த தந்தை, வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சேலத்தில், வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டியை, பட்டப்பகலிலேயே கொன்று விட்டு, நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில், கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிய வீரபத்திரன், மனைவி கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என, எல்லா திசைகளிலும். குற்ற சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
பட்டப்பகல், நள்ளிரவு என பாகுபாடு இல்லாமல், ரத்தத்தில் தமிழகம் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில், மக்கள் பரிதவித்து கிடக்கின்றனர். மக்களின் உயிரை காப்பதில், கவனம் செலுத்த வேண்டிய, முதல்வரின் கவனம் மொத்தமும், தன் நாற்காலியை காப்பாற்றுவதிலேயே இருக்கிறது.
போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர், 'சூட்டிங்' மோடில் இருந்து விடுபட வேண்டும். 'ப்ளீஸ், டேக் ஆக்சன் சி.எம்., சார்'. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஆமாம், இரும்புக்கை கோப்பால் சாரின் பொற்கால ஆட்சியில் மொத்தக் கவனமும் ஊழல் செய்வதிலும், கொள்ளையடிப்பதிலும் தான் இருந்தது. ஆமா, நீதான் பெரிய அயோக்கிய ஸாரி யோக்கிய சிகாமணி ஆச்சே. அப்புறம் என்ன கூ.. தலுக்கு அதிமுக உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தாய்?
ஆமாம்,இடைத்தேர்தல் முடிவில் தெரியவரும். நீங்களும் அதே வேலையை தானே செய்கிறீர்கள்..
நமக்கு தற்சமயம் நாற்காலி பற்றிய கவலை இல்லை. ஆனால் அடிச்சது மொத்தத்தையும் எப்படி பாதுகாப்பது என்பதுதான் பெருங்கவலை.
இவருக்கு கண்ணு எல்லாம் பெண்கள் மேலதான், அப்புறம் குடும்மா திருட்டு சொத்து சேக்குறதுலதான்
இவருக்கு கவனம் எல்லாம் ஊழல் செய்வதில் உள்ளது
இந்த குற்றங்களை செய்தவர்கள் கடந்த மூன்று மாதங்களில் உறுவனார்வர்கள் அல்ல. நீங்கள் உங்கள் திராவிட மாடலில்நீங்கள் ஒரு 'அப்பாவாக' இருந்து வளர்த்த விஷ பாம்புகள். எல்லோருக்கும் தெரியும். இப்போது 'அப்பாவி' வேடம் போடாதீர்கள். தீயமுகவில் சமூக விரோதிகள் என்ற அடையாளம் இல்லாதவரை உறுப்பினர் பதவிகூட கிடைக்காது.
என்னமோ இவருடைய ஆட்சி"ல நாட்டுல தேனாறும் பாலாறும் ஓடின மாதிரி... உங்க லட்சணம் நல்லா இருந்தா ஏன் மக்கள் மாற்றத்தை விரும்பி ஓட்டு போட்டாங்க...
துய சக்தி என்று சொல்லி கொண்ட தவெக இப்போது துரதிஷ்ட சக்தியாக மாறி வருகிறதோ என்று மக்கள் சந்தேக படுகிறார்கள்
சிவநாயகம்....தீய சக்தி திமுக வேண்டவே வேண்டாம் என்று தமிழ்மக்கள் சந்தோஷபடுகிறார்கள்
அழுவாதே ஏன் செல்ல கண்ணு நீ அழுது அழுது மோகம் வீங்கி போச்செ.
எப்படியாவது குறுக்கு வழியில் முதலமைச்சரின் உட்கார வேண்டும் என்று பிரயத்தனப்படுபவர் நீங்கள். விதியை எப்படியாவது கவிழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் தினம் தினம் ஒரு திட்டம் போட்டு தவியாய் தவித்துக் கொண்டுள்ளீர்கள். உங்களை எல்லாம் ஒழித்துக் கட்டத்தான் இறைவன் விஜய்யை அனுப்பியுள்ளான் தேவ தூதனாக. எனவே அமைதியாக கலந்து கொண்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் இவ்வளவு காலங்கள் கொள்ளை அடித்தது போதும் இன்னும் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற பேராசையில் மனம் துடித்துக் கொண்டுள்ளது உங்களுக்கு. அது என்ன உங்கள் குடும்பம் தான் தமிழகத்தை ஆள வேண்டுமா தமிழகம் உங்களுக்கு சொந்தமானதா.மேலும்
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது
-
போராடும் மாணவர்களை கையாள முழுசுதந்திரம் வழங்க முடியாது; டில்லி போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்