போராடும் மாணவர்களை கையாள முழுசுதந்திரம் வழங்க முடியாது; டில்லி போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்
புதுடில்லி: தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தினமும் டில்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இண்டி கூட்டணி கட்சியினர் மட்டுமல்லாது, பல்வேறு மாணவர் அமைப்பினரும் போராடி வருகின்றனர். தடுப்புகளை அமைத்து மாணவர்களை போலீசார் தடுத்து வருகின்றனர். ஆனால், மாணவர்களில் சிலர் போலீசார் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், பல போலீசாருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, போராட்டம் நடத்தும் மாணவர்களை கையாள்வதற்கு முழு சுதந்திரம் வழங்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் டில்லி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கூறியதாவது; போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இளம் மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும். மாணவர்கள் நீதிமன்ற விசாரணைகளில் சிக்கி தவிக்கக் கூடாது, எனக் கூறினர்.
எனவே, போராட்டம் நடத்தும் மாணவர்கள் விவகாரத்தில் முழு சுதந்திரம் போலீசாருக்கு வழங்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். ஆனால், தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
மேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது