8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கிறார் டிரம்ப்: நோபல் பரிசுக்கு மீண்டும் குறி

29

வாஷிங்டன்: தற்பெருமைக்காகச் சொல்லவில்லை, நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: வேறு யாரும் செய்யாத காரியங்களை நான் செய்திருக்கிறேன். நான் தற்பெருமை பேசவில்லை, உண்மைகளை மட்டுமே சொல்கிறேன்; ஒருவேளை எந்த அதிபரும் எந்தப் போரையும் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க மாட்டார்.

நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். விரைவில் எனது பட்டியலில் மற்றொரு போர் நிறுத்தம் சேர்க்கப்படலாம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார். டிரம்ப் பல ஆண்டுகளாக இதற்கான வாதத்தை முன்வைத்து வருகிறார்.

கடந்தாண்டில்….

கடந்த 2025ம் ஆண்டு நோபல் பரிசு கிடைக்காததால் டிரம்ப் வெளிப்படுத்திய விரக்தி ஒரு சர்ச்சையாக வெடித்தது. கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான தனது முயற்சியால் நார்வேயுடன் ஏற்பட்ட ஒரு சர்ச்சையைத் தொடர்ந்து, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவில்லை என்று டிரம்ப் புகார் கூறி வந்தார்.

இனி முற்றிலும் அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை தனக்கு இல்லை என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். நோபல் அமைதிப் பரிசை யார் பெறுவது என்பதை நார்வே அரசு தீர்மானிப்பதில்லை. இவ்விருதை சுதந்திரமான நார்வே நோபல் குழுவே தேர்ந்தெடுக்கிறது என பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோ பதில் அளித்து இருந்து இருந்தார்.

கனவு பலிக்குமா?

அதிபர் டிரம்ப் மோதலை தீர்த்து வைத்தேன் என்று தொடர்ந்து கூறி வந்தாலும், ஈரானுடனான அமெரிக்கப் படைகள் தற்போதைய மோதலைக் கருத்தில் கொண்டு, 2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அதிபர் டிரம்ப் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்தனர். நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளர் நாளை (அக்டோபர் 9) வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட உள்ளார்.

கருத்து பதிவிடுங்கள்!

அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்குமா என்று உங்கள் கருத்தை கமென்டில் பதிவிடுங்கள் வாசகர்களே!

* கிடைக்கும்.

* கிடைக்காது.

* என்றைக்கும் கொடுக்க கூடாது.

உங்கள் கருத்தை சொல்லுங்கள்!

Advertisement