மீண்டும் பிளேக் பீதி? 'எல்லாம் வதந்தி' என்கிறது ரஷ்யா
மாஸ்கோ: ரஷ்யாவில் பிளேக் நோய் பரவுவதாக சர்வதேச அளவில் பீதி கிளம்பியுள்ள நிலையில், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அத்தனையும் வடிகட்டிய பொய்; நாட்டில் எந்த நோய்த்தொற்று அபாயமும் இல்லை, என ரஷ்ய அரசு மறுத்துள்ளது. அதேநேரம், 'உண்மையை மறைக்காமல் தெளிவுபடுத்துங்கள்' என உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவுக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் நகரில் உள்ள பிளேக் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த 28 வயது பெண் ஆய்வக ஊழியர் ஒருவர், கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்தார். ஆபத்தான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கையாளும் ஆய்வகத்தில் பணிபுரிந்தவர் என்பதால், அவர் 'பிளேக்' நோயால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
இதைத் தொடர்ந்து, அதே ஆய்வகத்தில் பணியாற்றிய மற்றொரு ஊழியரும் தீவிர நிமோனியா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் பரவின. இதனால் ரஷ்யாவில் மீண்டும் கொடிய பிளேக் நோய் தலைதூக்குகிறதா என்ற உலகளவில் அச்சம் ஏற்பட்டது.
ரஷ்யா மறுப்பு:
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை, வெறும் வதந்திகள். அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அபாயம் இல்லை
ரஷ்ய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்பட சுமார் 5,000 பேருக்கு தீவிர ஆய்வகப் பரிசோதனை நடத்தப்பட்டது. யாருக்கும் ஆபத்தான கிருமி பாதிப்போ அல்லது பிளேக் அறிகுறியோ இல்லை. கண்காணிப்பில் வைக்கப்பட்ட 90 சதவீதம் பேர் பூரண நலமுடன் வீடு திரும்பிவிட்டனர். அந்தப் பெண்ணுக்கு உரிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தன. எனவே, பிளேக் தொற்று பரவும் அபாயம் துளியும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஆனால், பிளேக் இல்லை எனில், அந்தப் பெண் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என ரஷ்யா இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ரஷ்யாவுக்கு கிடுக்கி:
உயிரிழந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனைகளின் முழு விவரங்களையும், இரண்டாவது ஊழியருக்கு ஏற்பட்டுள்ள மர்ம நிமோனியா பாதிப்பு குறித்தும் ரஷ்யா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இது போலத்தான் வூஹானிலுள்ள லாபில் கிருமிகள் எதுவும் கசியவில்லைன்னு சீனா சாதித்தது. ஆனால் COVID அங்கிருந்தே பரவியது பின்னர் புரிஞ்சுது. ரஷ்யா சீனா எப்போது உண்மையை ஒப்புக்கொண்டன?மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்