ஜல்லிக் கற்கள் பெயர்ந்த சாலை: வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்

காஞ்சிபுரம்: சின்ன அய்யங்குளம் காலனி பிரதான சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, சின்ன அய்யங்குளம் காலனி பிரதான சாலை வழியாக, அண்ணா குடியிருப்பு, தாண்டவராயன் நகர், ஓரிக்கை பழைய காலனி, திருவேகம்பன் நகர், அரசு ஆதிதிராவிடர் பள்ளி, ஓரிக்கை பாலாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன. மேலும், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, சேதமடைந்த சின்ன அய்யங்குளம் காலனி சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement