நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள், மக்கள் கடும் அவதி
கண்ணுார்: கண்ணுார் பகுதியில், நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது கண்ணுார் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை வழியாக, தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில், வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நெடுஞ்சாலையின் பல இடங்களில் இளைப்பாறுகின்றன. சில நேரங்களில், நெடுஞ்சாலையில் கால்நடைகள் கூட்டமாக உலா வருவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் உத்தரவிட்டும், நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்