கல்லுாரி பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் மீது வழக்கு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் 39. தனியார் கல்லுாரியில் 6 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரி பஸ்சை ஓட்டிச் சென்ற போது செல்வநாயகபுரம் அருகே ரோட்டில் செல்வது சம்பந்தமாக டிரைவருக்கும் டூவீலரில் வந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின் மாணவிகளை இறக்கி விட்டு கீரனுார் நோக்கி சென்ற போது மீண்டும் டூவீலரில் வந்த இருவர் கல்லுாரி பஸ்சை பின் தொடர்ந்து வந்துள்ளனர். பின் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த வாளால் பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். முதுகுளத்துார் போலீசில் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் ஆனைசேரி ஜெகதீஸ்வரன், இதயக்கண்ணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
Advertisement
Advertisement