திமுக ஆட்சிக் காலங்களில் தான் நவீன தமிழகம்: சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சிக் காலங்களில்தான் நவீன தமிழகம் கட்டியெழுப்பப்பட்டது என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்ந்து நிற்கும் வளர்ச்சிச் சின்னங்கள் பறைசாற்றும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட பூந்தமல்லி - போரூர் - வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அதுகுறித்த சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கருணாநிதி ஆட்சி காலத்தில் நான் துணை முதல்வராக இருந்தபோது துவங்கப்பட்டது.
பல்வேறு தருணங்களில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். வரும் 11ம் தேதி பிரதமர் திறந்து வைக்கப்பட இருக்கும் பூந்தமல்லி - போரூர் - வடபழனி வழித்தடத்தை 2025ம் ஆண்டு இறுதிக்குள்ளேயே திறந்திட அனைத்து முயற்சிகளையும் திராவிட மாடல் அரசில் செய்தோம்.
மிகுந்த மகிழ்ச்சி
இருப்பினும், சிக்னல் அமைப்புக்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அது இயலாமல் போனது. அச்சூழலில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, திட்டமிட்டபடி நமது ஆட்சிக்காலத்தில் இதனைத் திறந்து வைக்க முடியவில்லை.
எனினும், ஒருவழியாகச் சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வர இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன்.
வளர்ச்சி சின்னங்கள்
ஆண்டுக்கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ ரயில் எனும் குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்கிறேன். இவ்வேளையில் வள்ளுவர் கோட்டம் குறித்த ஒரு வரலாற்று நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் மட்டுமல்ல, சென்னை மாநகரில் காணும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் திமுக அரசின் பெயர்தான் இருக்கும். திமுக ஆட்சிக் காலங்களில்தான் நவீன தமிழகம் கட்டியெழுப்பப்பட்டது என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்ந்து நிற்கும் வளர்ச்சிச் சின்னங்கள் பறைசாற்றும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
திரும்ப நாலு மாதங்களில் கற்காலத்துக்கு போக ஏன் அனுமதித்தீர்கள் திராவிட தலைவரே? நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் தமிழ்நாடு அமெரிக்காவை மிஞ்சியிருக்கும்! ஏமாற்றி விட்டீர்களே அய்யா!
நாவீன மான முறையில் ஊழல் அது தானே? தலைவரே
மூன்று தலைமுறையாக உங்களின் குடும்பங்களும் சுற்றங்களும் பதவிகளை அனுபவித்து, ஊழலை தினசரி வாழ்க்கையில் ஒரு நிரந்தர தொழிலாகவே மாற்றி மக்கள் பணத்தை கோடிகோடியாக கொள்ளையடித்தது மட்டுமல்லாமல், அது ஒரு குற்றமே இல்லாத செயல் என்பதுபோல் ஒரு பிம்பத்தினை ஏற்படுத்தி அரசு ஊழியர்களையும், தமிழக மக்களையும் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஊழல் செய்ய தூண்டியது மட்டுமல்லாமல், வந்தாரை வாழவைக்கும் தமிழ் மக்களை முட்டாள்களாகவும், சுயநலவாதிகளாகவும், குடிகாரர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், இலவசங்களை எதிர்பார்க்கும் சோம்பேறிகளாகவும், பேராசைக்காரர்களாகவும், பொறாமைபிடித்தவர்களாகவும், ஊழல்வாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் மாற்றி கல்வியை வியாபாரமாக்கி மக்களின் அறிவை மழுங்கடித்துவிட்டு, தொலைநோக்குப்பார்வையுடன் எந்தவிதமான அடிப்படை சமுதாய கட்டமைப்புகளையும் உருவாக்காமல் வெறும் கட்டிடங்களை மட்டுமே கட்டினால் வளர்ச்சி என தமிழக மக்களை நம்பவைத்து 100கும் 200கும் ஓடும் ஆட்டுமந்தைகளாக்கி பட்டியில் அடைத்து தமிழையும், தமிழரையும், தமிழ் மண்ணையும் சுரண்டிவிட்டீர்களே இதுதான் உங்கள் திராவிட ஆட்சியாளர்களின் நவீன தமிழகமா?
அப்பா, தவறு செய்து விட்டீர்கள். இப்படி சொந்த காசில், வள்ளுவர் கோட்டம் கட்டினீர்கள், பல மேம்பாலங்கள் கட்டினீர்கள், மெட்ரோ ரயில் பாதையும் அமைத்தீர்கள். இப்படி எல்லா பணத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்காக செலவழித்து விட்டு இன்று கையில் வெறும் 10000 ரூபாயுடன் நிற்கிறீர்கள்.
ஆமாம் அவர் சொல்வதில் என்ன தவறு.
ENDHA KOMALI IVARUKKU NAVEENA THAMIZHAGAM ENDRAAL TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI PAALIYAL KODUMAI EBA EZHUDHI KODUTHAANGA.
ஆமாம் இதை யாராலும் மறுக்கமுடியாது .இதற்காக உங்களுக்கு உலகளவில் நோபல் பரிசுக்கு இணையாக ஒரு பரிசு கொடுத்திருக்கலாமே .அதற்கென்று ஆராய்ச்சிகூடம்வைத்து விதவிதமாக எப்படி ஊழல் செய்வதென்று கண்டுபிடித்து அதை மற்றமாநிலங்களுக்கும் பரவ செய்து அவர்களையெல்லாம் ஜெயிலுக்கும் அனுப்பிவைத்த சாதனை யாரால்தான் செய்யமுடியும் .அதைவிட மேலானது அந்த ஊழல்பனத்தையெல்லாம் பதுக்கும் முறைதான் .அதையெல்லாம் எத்தனை இலான் மஸ்குகள் வந்தாலும் கண்டுபிடிக்கமுடியாது என்பதுதான் அதனுடைய தனித்துவம் .
உண்மை அதுதானே.