மட்கும் 'குப்பை'யான பேரூராட்சி வண்டிகள்
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சியில் குப்பை வண்டிகளை சரிவர பராமரிக்காததால் குப்பையாக மாறி கிடக்கின்றன.
இங்கு துாய்மை பணிகளுக்காக சில ஆண்டுகளுக்கு முன் 3 சக்கர பேட்டரி வண்டிகள் வழங்கப்பட்டன. இவை அடிக்கடி பழுதானாலும், பேட்டரி செயலிழந்ததாலும் பராமரிக்கப்படாமல் பேரூராட்சி வளாகத்தில் திருமண மண்டபத்தின் பின்புறம், குப்பையோடு குப்பையாய் ஓரங்கட்டப்பட்டது.
இந்த வண்டிகள் மழை, வெயிலில் நனைந்து துருப்பிடித்து பாழாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஏற்கனவே வண்டிகள் பற்றாக்குறையால் துாய்மை பணிகளில் சுணக்கம் நிலவுகிறது. ஏராளமான வண்டிகளிருந்தும் அதனை முறையாக பராமரிக்காமல் அரசு நிதி வீணடிக்கப்பட்டும் உள்ளது. பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்தால் சரிதான்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது
Advertisement
Advertisement