கூட்டுறவு, ஊரக வளர்ச்சி வங்கிகளில் நீண்ட கால கடன்கள் வழங்கல்
விழுப்புரம்: தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் நீண்ட கால கடன்கள் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி செய்திக்குறிப்பு:
தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில், விவசாயிகளுக்கு நீண்ட கால கடன் வழங்கும் திட்டத்திற்கு, ரூ.50 கோடி அளவிற்கு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், நீண்ட கால கடன்களாக சூரிய சக்தி வேலி அமைத்தல், சூரிய சக்தி உலர்த்தும் இயந்திரம், சூரிய சக்தி மின் மோட்டார், டிராக்டர், ஒருங்கிணைந்த நெல் அறுவடை இயந்திரம், சிறு பால்பண்ணை, ஆடு மற்றும் கன்று வளர்ப்பு, கோழி பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு, உள்நாட்டு மீன்வளர்ப்பு திட்டம், விவசாய மதிப்பு கூட்டும் இயந்திரங்கள், நபார்டு வங்கியின் மூலம் அனுமதிக்கப்பட்ட இதர பண்ணைசார்ந்த திட்டங்களுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது.
இந்த கடன் தேவைப்படும் பயனாளிகள் தங்களது செயல் எல்லைக்குட்பட்டு செயல்பட்டு வரும் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை (நில வள வங்கிகள்) நேரில் அணுகி கடன் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது