குழந்தை தொழிலாளர்கள் அதிரடி மீட்பு
திருப்பூர்: திருப்பூரில் பனியன் ஜாப் ஒர்க் நிறுவனத்தில் பணியாற்றிய 4 குழந்தை தொழிலாளர்கள் உட்பட 13 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதாக கூறப்படும் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
திருப்பூர், கவுண்டநாயக்கன்பாளையம் ரோடு, பாரதி நகரில் உள்ள பனியன் ஜாப் ஒர்க் நிறுவனத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்த சிறுவர், சிறுமியரை தங்கவைத்து வேலைக்கு அமர்த்தியிருப்பதாகவும், அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்தது.
இதையடுத்து ஆர்.டி.ஓ. சிவபிரகாஷ், வடக்கு தாசில்தார் கோவிந்தசாமி, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நிறுவன உரிமையாளர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்கள், வாலிபர்கள் பணியாற்றியது தெரியவந்தது. அவர்களில் 4 பேர் குழந்தை தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்ததை தொடர்ந்து, அவர்களை அதிகாரிகள் மீட்டனர்.
குழந்தை தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்ததாகவும், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்ததாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் முறையாக வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மீட்கப்பட்ட 4 குழந்தை தொழிலாளர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது