21 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் வங்கதேச யாசகர்
டாக்கா: வங்கதேசத்தைச் சேர்ந்த யாசகர் மோரு மியா,35. இவர் உள்ளூர் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில், தனக்கு 21 மனைவிகள் இருப்பதாகவும், அவர்களின் பெயர்களை நினைவில் வைக்க மிகவும் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலாகியது.
மேலும் அவர் கூறியதாவது; நான் எப்போதுமே யாரையும் தேடிச் சென்று திருமணம் செய்து கொள்ள கேட்டதில்லை. ஆனால், பெண்கள் தான் என்னிடம் வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். நான் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் என்னை விட வயதில் பெரியவர்கள்.
பெண்களின் கோரிக்கை மறுப்பது அவர்களுக்கு செய்யும் அவமரியாதையாக பார்க்கிறேன். இதன் காரணமாகவே அனைவரையும் திருமணம் செய்து கொண்டேன்,இவ்வாறு அவர் கூறினார்.
அவரது இந்த வீடியோ வைரலான நிலையில், திருமண வயது கடந்தும் பெண் கிடைக்காத இளைஞர்கள், இதனை பார்த்து முனுமுனுத்து வருகின்றனர்.
மேலும்
-
சிறப்பு மருத்துவ முகாமில் 33 பேருக்கு அடையாள அட்டை
-
புற்றுநோய் மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்; மத்திய அரசு முடிவு
-
கனடிய எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
-
பெண் போலீசை முழங்கையால் குத்து; போராட்டத்தில் அத்துமீறிய ராகுல், பிரியங்கா வீடியோ வெளியீடு
-
மாநில சிலம்ப போட்டிக்கு சங்கராபுரம் மாணவர் தேர்வு
-
சங்கராபுரம் நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி