சங்கராபுரம் நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி
சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் பேருராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்கப் பாய்கின்றன. இரவு நேரங்களில் அதிகளவில் தொல்லை தருவதால் மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
நாளுக்கு நாள் நகரில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் நகரில் நாய்களைக் கட்டுப்படுத்த பேருராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement