மாநில சிலம்ப போட்டிக்கு சங்கராபுரம் மாணவர் தேர்வு

சங்கராபுரம்: முதலமைச்சர் கோப்பை சிலம்பம் போட்டியில் சங்கராபுரம் மாணவர் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுப் பிரிவுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டுக் கழகம் சார்பில் சங்கராபுரத்தைச் சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் முதலிடம் பிடித்தார்.

இதன் முலம் மாநில அளவில் நடைபெற உள்ள சிலம்பம் போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பத்மஜா பதக்கம் மற்றும் சான்றிழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட சிலம்பம் விளையாட்டுக் கழக பயிற்சியாளர்கள் சூரியமுர்த்தி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement