கனடிய எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

- நமது நிருபர்-

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், வேதியியல், இயற்பியல், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டது.

இதன்படி கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஆன் கார்சன் இப்பரிசை பெறுகிறார்.
"செவ்வியல் மரபோடு ஒரு எளிமையான உரையாடலை மேற்கொண்டு, சமகால இலக்கியத்திற்குப் புதிய வடிவங்களை உருவாக்கிய துணிச்சலான மற்றும் புதுமையான படைப்புக்காக பரிசை பெறுகிறார்.

Advertisement