தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முடங்கிப்போய் விட்டது; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முடங்கிப்போய் விட்டது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது; சென்னை திருவொற்றியூரில், வடமாநில தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த, ஐந்து வயது குழந்தை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்வாதாரம் தேடி, தமிழகத்தை நம்பி வந்த, ஏழை தொழிலாளியின் குழந்தைக்கு, தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத அவல நிலையை எண்ணி நெஞ்சம் பதறுகிறது. த.வெ.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு முற்றிலும் முடங்கிப்போய் விட்டது.

காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் விஜய், செயலற்று இருக்கிறார். குற்றவாளிகளுக்கு, துளியும் பயம் இல்லாமல் போனதற்கும், குற்றங்கள் தலைவிரித்தாடுவதற்கும், த.வெ.க., ஆட்சியின் நிர்வாக சீர்கேடும், அனுபவமின்மையும் முக்கிய காரணம்.

வெற்று பிம்ப அரசியலை விட்டுவிட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்பர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement