புற்றுநோய் மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்; மத்திய அரசு முடிவு
புதுடில்லி: புற்றுநோய் மருந்துகளை அதிக விலைக்கு விற்பது படுகொலைக்கு சமம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருந்தது.
புற்றுநோய் மருந்துகளுக்கு விலை உச்சவரம்பை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து அட்டவணைப்படுத்தப்படாத புற்றுநோய் மருந்துகளுக்கும், சில்லறை விற்பனை விலை அதிகபட்சமாக எம்ஆர்பியில் (MRP) இருந்து 30 சதவீதமாக நிர்ணயம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிராண்டட், உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட, காப்புரிமை பெற்ற மற்றும் பெறாத மருந்துகளின் விலை குறையும். அதாவது, எம்ஆர்பி விலை 70% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், மருந்து நிறுவனங்களுக்கான அதிக வர்த்த லாபத்தை கட்டுப்படுத்தி, குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
அமைதி தூதர் - mumbai,இந்தியா
08 அக்,2026 - 18:46 Report Abuse
வருஷத்துக்கு நூறு நாட்களுக்கு மேல் விடுமுறை அனுசரிக்கும் கோர்ட் அதைப்பற்றி கருத்து சொன்னால் நல்லது 0
0
Reply
மகா - ,
08 அக்,2026 - 18:38 Report Abuse
மிகவும் முக்கியமான முடிவு . புற்று நோய் ஏழை பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை. சில தன் ஆர்வலர்கள் மூலம் புற்று நோய் மருந்துகள் நோயாளிகளுக்கு சலுகை விலையில் கிடைத்தது. இப்போது அரசாங்கம் விலை கட்டுப்பாட்டை அறிவித்துஉள்ளது . மிகவும் வரவேற்கத்தக்க முடிவு. மருந்து மபியாவின் பயமுறுதள்ளுக்கு பணியாமல் இந்த விலை கட்டுப்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தால் இதை ஒரு புரட்சி என்றே சொல்லலாம். என்ன இதை பிடிக்காத சில பன்னாட்டு நிறுவனங்கள் ராகுல் காந்தி மூலமாக சில கரப்பான் பூச்சி போராட்டங்களுக்கு பணம் கொடுத்து நாட்டையும் மக்களையும் பிரிக்க முயற்சிக்கலாம். 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
08 அக்,2026 - 18:34 Report Abuse
சூப்பர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விலை ரெண்டுமடங்காகிவிடும். 0
0
Reply
மேலும்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
Advertisement
Advertisement