சிறப்பு மருத்துவ முகாமில் 33 பேருக்கு அடையாள அட்டை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாமில், 33 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் காமராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் ஜெயந்தி, கண் மருத்துவர் காயத்ரி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற மாற்று திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் 33 பேர்களுக்கு யு.டி.ஐ.டி., பதிவெண்ணுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. 9 பேருக்கு மாற்றுத்திறனாளி இல்லை என சான்றளிக்கப்பட்டது.

Advertisement